குறிச்சொல்: police

குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பாலியல் பலாத்காரம்: தலைமறைவான பிரபல நடிகர்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பாலியல் பலாத்காரம்: தலைமறைவான பிரபல நடிகர்

சற்றுமுன், செய்திகள்
சினிமாத்துறையில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரபல கன்னட நடிகர் ஒருவர் மீது இளம்பெண் பாலியல் பலாத்காரம் குறித்த புகாரை அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகர் சுப்ரமண்யா. இவர் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண்ணை திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்து சென்றாராம். ஆனால் வேறு இடத்திற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. மயக்கம் தெளிந்த எழுந்த அந்த இளம்பெண், நடிகர் சுப்ரமண்யா மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து தெரியவந்ததும் நடிகர் சுப்ரமண்யா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சுப்ரமண்யாவை தேடு வருவதாக கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘மாயவன்’ திரை விமர்சனம்

‘மாயவன்’ திரை விமர்சனம்

சற்றுமுன், விமர்சனம்
பல புதுமுக நடிகர்கள், இயக்குனர்களை திரையுலகில் அறிமுகப்படுத்திய பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் 'மாயவன்' போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷான் தற்செயலாக தீனா தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் பலத்த காயமடையும் சந்தீப், நூலிழையில் உயிர் தப்புகிறார். இதில் தீனா கொலை செய்யப்படுகிறார். இந்த நிலையில் உடல்நிலை தேறி மீண்டும் பணியில் சேர மனோதத்துவ டாக்டர் லாவண்யா திரிபாதியிடம் சான்றிதழ் வாங்கி வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். ஆனால் லாவண்யா, அவரது மனநிலை பணியில் சேரும் அளவுக்கு இல்லை என்று கூற, வேறொரு டாக்டரிடம் சான்றிதழ் வாங்கி பணியில் சேருகிறார் சந்தீப் இந்த நிலையில் தீனா கொலை செய்த அதே பாணியில் பிரபல நடிகை ஒருவரும் விஞ்ஞானி ஒருவரும், உளவியல் துறை நிபுணர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சந்தீப் கையில் வருகிறது
பற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு

பற்றி எரிகிறது தி.நகர் சென்னை சில்க்ஸ். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
சென்னை தி.நகர் 'சென்னை சில்க்ஸ்' ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடையில் இன்று காலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பற்றிய தீ, மளமளவென ஏழு மாடிகளுக்கும் பரவியதால் கட்டிடத்தில் இருந்த கண்ணாடிகள் வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதறியுள்ளது. மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் உடனே 6 தீயணைப்பு வண்டிகளில் வந்த சுமார் 40 தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால் புகை மிக அதிகளவில் வெளிவருவதால் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியவில்லை. இந்த தீவிபத்தை சென்னை போலீஸ் கமிஷனர், சென்னை கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சில்க்ஸ் உரிமையாளர் தீயணைப்பு படையினர் அலட்சியம் காரணமாக தீயை
ஜாதி பெயரை சொல்லி திட்டினாரா தாடி பாலாஜி? மனைவி போலீஸ் புகார்

ஜாதி பெயரை சொல்லி திட்டினாரா தாடி பாலாஜி? மனைவி போலீஸ் புகார்

சற்றுமுன், செய்திகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரும், பிரபல காமெடி நடிகருமான தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா, வன்கொடுமை புகார் ஒன்றை காவல்நிலையத்தில் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த பாலாஜி-நித்யா தம்பதியினர்களுக்கு போர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக ஏற்கனவே கிசுகிசு வெளிவந்தது. சமீபத்தில் இருவரும் சேர்ந்து ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்தது. இந்த நிலையில் பாலாஜியின் மனைவி நித்யா இன்று திடீரென மாதவரம் காவல்நிலையம் சென்று தனது கணவர் தன்னுடைய சமூகத்தின் பெயரை சொல்லி திட்டுவதாகவும், மேலும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். இந்த புக
‘பாகுபலி 2’ படம் பார்க்க விடுமுறை கேட்ட போலீஸ்காரர்

‘பாகுபலி 2’ படம் பார்க்க விடுமுறை கேட்ட போலீஸ்காரர்

சற்றுமுன், செய்திகள்
எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படத்திற்கு இதுவரையில் இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.1000 கோடி வசூலை இந்த படம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை முதல் நாளே பார்க்க ஆன்லைனில் பலர் முண்டியடித்து ரிசர்வ் செய்து வருகின்றனர். இந்தியாவின் பல திரையரங்குகளில் இந்த படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுக்களின் முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த போலிஸ்காரர் ஒருவர், பாகுபலி 2 படம் பார்ப்பதற்காக தனக்கு விடுமுறை அளிக்கும்படி உயரதிகாரிக்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தன்னுடைய விடுமுறை கடிதத்தில், ” கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும், எனவே தனக்கு வரும் 28-ஆம் தேதி விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்