குறிச்சொல்: politics

தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தல தோனி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் தல தோனி அவரை சந்திப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்புக்கும் ரஜினியின் அரசியல் களத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இருதரப்பினர் கூறிவருகின்றனர்.  
தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி

தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் நடிகையர் அரசியலில் குதிப்பது தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடான இலங்கையிலும் வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நடிகை மதுசா ராமசிங்கே என்பவர் விரும்பினார். தனது விருப்பத்தை அவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தேர்தலில் போட்டியிட உதவி செய்ய வேண்டுமானால் அதற்கு லஞ்சமாக தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை மதுசா, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அஜித்துக்கு கைதட்டி உடனே அவரையும் அரசியலுகு இழுத்திராதிங்க: அன்புமணி

அஜித்துக்கு கைதட்டி உடனே அவரையும் அரசியலுகு இழுத்திராதிங்க: அன்புமணி

சற்றுமுன், செய்திகள்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் கருப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் கட்சி ஆரம்பித்து எப்படி நேர்மையான அரசியலை தரமுடியும். எனக்கு தெரிந்து ஒரே ஒரு நடிகர், அஜித்தை தவிர வேறு யாரும் ஒழுங்காக வரி செலுத்துவதில்லை என்று கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் கைதட்ட, உடனே கடுப்பான அன்புமணி, 'உடனே கைதட்டி அவரையும் அரசிலுக்கு இழுத்திராதிங்க, நடிகர்களுக்கு கைதட்டி கைதட்டிதான் நாடு நாசமா போச்சு என்று கூறினார்.
ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அரசியல் பயணம் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செல்லவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, மூவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதனை அவர் உறுதி செய்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
துணை முதல்வர் பதவிக்கு அடிபோடுகிறாரா ராகவா லாரன்ஸ்?

துணை முதல்வர் பதவிக்கு அடிபோடுகிறாரா ராகவா லாரன்ஸ்?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தாலும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை, கட்சியின் பெயர் சின்னம் என எதையும் ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் இப்போதே ரஜினியை வருங்கால முதல்வர் என்று அறிவித்து வருகின்றனர் இதுவாவது பரவாயில்லை, ஆனால் ரஜினியின் ரசிகன், ரஜினியின் வெறியன் என்று கூறிக்கொள்ளும் ராகவா லாரன்ஸ், தற்போது அரசியல் ரஜினியின் காவலன் என்று கூறி வருகிறார். ரஜினியின் கட்சியில் இணைந்து அமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு ராகவா லாரன்ஸ் இப்போதே துண்டு போடுவதாக சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்

ரஜினியை அடுத்து அரசியலுக்கு வருகிறார் ராகவா லாரன்ஸ்

சற்றுமுன், செய்திகள்
நடிகர், இயக்குனர், நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு உள்பட பல போராட்டங்களுக்கு அவர் ஆதரவு கொடுத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அரசியல் வருகை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வரும் 4ஆம் தேதி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிக்கவுள்ளாராம். தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ், ரஜினி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாயாருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள ராகவா லாரன்ஸ் , அந்த கோவிலின் திறப்பு விழா தேதியையும் வரும் 4ஆம் தேதி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிக்கு சிரஞ்சீவி நிலை வருமா? நடிகை ரோஜா பதில்

ரஜினிக்கு சிரஞ்சீவி நிலை வருமா? நடிகை ரோஜா பதில்

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் வந்தார். ஆனால் அவரால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்த நிலையில் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் தஞ்சம் அடைந்தார் இந்த நிலையில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அதே நிலைமை வருமா? என்ற கேள்விக்கு ரஜினியுடன் ஒருசில படங்களில் நடித்த நடிகை ரோஜா கூறியபோது, 'சிரஞ்சீவி ஆந்திராவில் அரசியல் கட்சியை தொடங்கியபோது இருந்த சூழ்நிலை வேறு. அப்போது ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சி புரிந்தார். பலமான எதிர்க்கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இவர்களை எதிர்த்து அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆனால் ரஜினியின் நிலை வேறு. தமிழகத்தின் இப்போதைய அரசியல் சூழல் வேறு.” ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், தமிழகத்தில் அரசியல் நிலை மாறிவிட்டது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அரசியலை மக்கள் வெற
ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றும், அவர் நிச்சயம் வரும் 31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ரசிகர்கள் பலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் தற்போதைய அரசியல் அவருக்கு சரியாக வராது என்றும் கூறி வருகின்றனர். மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது: அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரச
31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

சற்றுமுன், தமிழகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் பேசினார் ரஜினிகாந்த் பேசியபோது, 'நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளேன்' என்று கூறினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ரஜினி, 'நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை, எனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகத்தான் சொன்னேன்' என்று கூறியதால் ரசிகர்கள் அமைதியாகினர் மேலும் எனக்கு அரசியல் எவ்வளவு ஆழம் என்பது தெரியும். அது தெரிந்ததால் தான் அமைதியாக உள்ளேன். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என்று கூறினார்
அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த 'சத்யா' திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: 'சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவி