குறிச்சொல்: posters

நான் ஒருவனே இந்த அரசியல்வாதிகளுக்கு போதும்! கமல்ஹாசன்

நான் ஒருவனே இந்த அரசியல்வாதிகளுக்கு போதும்! கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம், அவ்வப்போது கொடுக்கும் பேட்டி மூலமும் தமிழக அரசியல்வாதிகளை காரசாரமாக விளாசி வருகிறார். இதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருவதால் கமல்ஹாசனுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஒரு மறைமுக போர் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒருசில கமல் ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக கமலுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக அமைச்சர்களை கண்டித்தும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் சில சமயம் தரம் தாழ்ந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ரசிகர்களுக்கு ஒரு அறிவுரையை கூறியுள்ளார். 'தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்' என்று கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.