ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

குறிச்சொல்: power pandi

‘பவர்பாண்டி 2’ படத்திற்கு முன் இன்னொரு படமா? தனுஷ் விளக்கம்

‘பவர்பாண்டி 2’ படத்திற்கு முன் இன்னொரு படமா? தனுஷ் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் தனுஷ் முதன்முதலில் இயக்கிய 'பவர்பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று தனுஷ் உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்திற்கு முன்னர் இன்னொரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே 'பவர்பாண்டி 2' படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறிய தனுஷ், அந்த இன்னொரு படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறினார். பவர்பாண்டி' முதல் பாடத்தில் நடித்த ராஜ்கிரண் தான் கண்டிப்பாக இரண்டாவது பாகத்திலும் ஹீரோ என்றும் இருப்பினும் மற்ற கேர்கடர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தனுஷ் மேலும் கூறினார்.
பவர்பாண்டி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பவர்பாண்டி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சற்றுமுன்
தனுஷ் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. ராஜ்கிரண்,பிரசன்னா,சாயா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கௌரவ வேடத்தில் தனுஷ் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில் படம் நேற்று வெளியானது. அனைத்து பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் விமர்சனங்களை பார்த்தால் தனுஷ் இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்பது உறுதியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல்நாள் சென்னையில் மட்டும் 57 லட்சங்கள் வரை வசூல் ஆனதாக கூறப்படுகிறது.