ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: rajinikanth

தாணுவை அடுத்து ரஜினி-விஜய்யை வளைத்து போட்ட சன்பிக்சர்ஸ்

தாணுவை அடுத்து ரஜினி-விஜய்யை வளைத்து போட்ட சன்பிக்சர்ஸ்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து சாதனை செய்தவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் தயாரித்த கபாலி, தெறி ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் இந்த நிலையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதேபோல் ரஜினி-விஜய் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கின்றது. விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் படம், ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இரண்டு படங்களின் பட்ஜெட்டை கணக்கு போட்டு பார்த்தால் ரூ.400 கோடியை நெருங்கிவிடும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
ரஜினியின் புதிய படம் அறிவிப்பால் தனுஷ் படம் டிராப்பா?

ரஜினியின் புதிய படம் அறிவிப்பால் தனுஷ் படம் டிராப்பா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் நாளை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினியின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை இயக்கவிருந்த நிலையில் திடீரென ரஜினி படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ், தனுஷூக்கு கூறிய கதையைத்தான் கொஞ்சம் ரஜினிக்கு தகுந்தவாறு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்
2.0 பட பட்ஜெட்டை மிஞ்சும் தமிழ்ப்படம்

2.0 பட பட்ஜெட்டை மிஞ்சும் தமிழ்ப்படம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' திரைப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. தமிழில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இதுதான் இந்த நிலையில் இந்த படத்தை மிஞ்சும் அளவில் ரூ.500 கோடியில் 'ராமாயணம்' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மது மந்தனா, மற்றும் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகவுள்ளது. இந்த படத்தில் பாலிவுட், கோலிவுட், மற்றும் டோலிவுட் பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் பணிகள் தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் சற்றுமுன்னர் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது டுவிட்டரில் 'காலா' திரைப்படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த டீசரில் “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசன வரியையும் அவர் பதிவு செய்துள்ளதால் டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 'கபாலி' படத்தில் நான் வந்துட்டேன்னு சொல்லு' என்ற பஞ்ச் போல் இந்த பஞ்ச்சும் பற்றியெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
கமல் கட்சியை ஆரம்பித்து முதல் கட்டமாக தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து கட்சி கொடி,சின்னம்,கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரஜினி தனது ரசிகா்களை சந்தித்து வருகிறார். தற்போது நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியதாவது, சத்தம் போடுகிறவா்கள் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக நமது வேலையை பார்ப்போம் என்று கூறினார். சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரை காணொளி மூலம் கலந்துரையாடி வந்த ரஜினி இன்று திடீரென நேரில் நெல்லை மாவட்ட ரசிகா்களை நேரில் சந்தித்து பேசினார். நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாவது, அரசியலில் மிக முக்கியம் குடும்பம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்க
நீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

நீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில மாதங்களாகவே ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்று முழங்கி வரும் இவர், சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ''அறிவாளியாய் இருப்பதை விட புத்திசாலியாய் இருக்கிறவன் தான் ஜெயிப்பான் என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு சாதி, இனம், மதம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இவை அத்தனையையும் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு. கரை வேட்டி கட்டி, கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு, மைக் பிடித்து பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல! திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் கருத்துகளைச் சொல்லலாம். என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி
லதா ரஜினிகாந்துக்கு  நீதிமன்றம் கெடு

லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் கட்சி துவங்கி சட்டமன்ற தோ்தலில் போட்டியிட போவதாக அறிவித்து அது தொடா்பாக தனது அரசியல் பயணத்தை துவங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு கோச்சடையான் படத்தை ரஜினி நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்திற்காக ஆட் பீரோ நிறுவனம் ரூ.10 கோடியை பைனான்ஸ் தொகையாக கொடுத்துள்ளது.லதா ரஜினிகாந்த் இந்த தொகையில் ரூ.8.5 கோடியை இன்னும் திருப்பி செலுத்தவில்லை. அது தொடா்பாக ஆட் பீரோ நிறுவனம் வழக்கு தொடா்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆட் பீரோ நிறுவனத்திடம் வாங்கிய கடனை எப்போது திருப்பி செலுத்துவீா்கள் என கேள்வி எழுப்பியுள்ளது. எப்போது கடன் தொகையை திருப்பி செலுத்துவீா்கள் என்று இன்று நண்பகல் 12.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அதன் பின் விசாரணைக்கு வந்த போது லத
ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14 வினாடிகள் மட்டுமே அடங்கிய அந்த லீக் வீடியோவில் ரஜினிகாந்த் தன்னை அடிக்க வரும் வில்லன் ஒருவரை, உதைப்பது போன்றும் அதன் பின்னணி நெருப்பு எரிவது போன்றும் உள்ளது. காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டீசர் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையத்தில் லீக் ஆன காட்சி தயாரிப்பாளர் தனுஷை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நண்பர்கள்தான்; ஆனால் அரசியலில் அல்ல- ரஜினி குறித்து கமல் பேச்சு

நண்பர்கள்தான்; ஆனால் அரசியலில் அல்ல- ரஜினி குறித்து கமல் பேச்சு

சற்றுமுன், செய்திகள்
திரையுலகில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அரசியலுக்கு வருவதும் உறுதியாகியுள்ளது.இதையடுத்து அரசியல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த வருடம் எனது அரசியல் பயணத்தை கிராமங்களில் இருந்து துவங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது கேள்வி கேட்க முடியாது. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனக்கும் ரஜினிக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். நானும் ரஜினியும் நல்ல நண்பர
தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

தல-தலைவர் திடீர் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தல தோனி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் தல தோனி அவரை சந்திப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்புக்கும் ரஜினியின் அரசியல் களத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் இருதரப்பினர் கூறிவருகின்றனர்.