குறிச்சொல்: Shooting

ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு ஆரம்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு ஆரம்பம்

Uncategorized
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாளமயம்' என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இரண்டு இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் இணையும் இந்த படம் ஒரு இசை சம்பந்தப்பட்ட படம் என்றும் இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் கழுத்தில் ருத்திராட்சமும், சிலுவையும் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வந்தது தனுஷின் ஹாலிவுட் படம்

முடிவுக்கு வந்தது தனுஷின் ஹாலிவுட் படம்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிக்கும் முதல் ஹாலிவுட் படமான 'The Extraordinary Journey of the Fakir' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தொடங்கிய நிலையில் இந்த படம் இரண்டே மாதத்திற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக ஹாலிவுட் படம் என்றால் குறைந்தது ஒரு வருட படப்பிடிப்பு இருக்கும். ஆனால் தனுஷ் உள்பட இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட காலத்திற்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். பிரபல ஈரான் இயக்குனர் Marjane Satrapi இயக்கும் இந்த படத்தில் தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் 'பண்டிட் குவீன்' படத்தின் நடித்த சீமா பிஸ்வாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘காலா’ படத்தில் நடிப்பது உண்மையா? தனுஷ் தகவல்

‘காலா’ படத்தில் நடிப்பது உண்மையா? தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தின் அடுத்த படப்பிடிப்பு சென்னையில் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் சிறுவயது ரஜினியாக தனுஷ் நடிப்பது குறித்து வெளிவந்த தகவல்களுக்கு தனுஷ் விளக்கமளித்துள்ளார் இதுகுறித்து அவர் கூறியபோது, 'அப்படி ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருப்பதை நானும் பார்த்தேன். ஆனால் அப்படி ஒரு கேரக்டர் அந்த படத்தில் இருக்கின்றதா? என்பது எனக்கே உண்மையாக தெரியாது. அப்படி ஒரு கேர்கடர் இருந்து அதில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அது எனக்கு மகிழ்ச்சியான செய்திதான் என்று கூறினார். சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கும் உள்ளது. அது நிறைவேறுவது கடவுளின் கையில் தான் இருக்கின்றது என்று தனுஷ் மேலும் கூறினார்.
மீண்டும் வியாழக்கிழமை செண்டிமெண்டில் ‘விவேகம்’

மீண்டும் வியாழக்கிழமை செண்டிமெண்டில் ‘விவேகம்’

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தில் இடம்பெறும் அஜித், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு வியாழக்கிழமை செண்டிமெண்ட்பட வரும் வியாழன் அன்று படப்பிடிப்பு முடிவடையதுள்ளதாகவும், அதன்பின்னர் அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் அனைவரும் வரும் வார இறுதியில் இந்தியா திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அன
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் திரையுலக வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க பல இயக்குனர்கள் முயன்று வரும் நிலையில் இந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் பிரபல இயக்குனர் பாண்டிராஜ், ஆம், சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விஷாலுடன் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு த
மும்பை தாராவியை சென்னைக்கு தூக்கி வரும் ரஞ்சித்

மும்பை தாராவியை சென்னைக்கு தூக்கி வரும் ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் ரஜினியை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடுவதால் திட்டமிட்டபடி காட்சிகளை படமாக ரஞ்சித் திணறி வருகிறாராம். இந்த நிலையில் ரஜினியின் ஒருசில முக்கிய காட்சிகளை மட்டும் தாராவியில் முடித்துவிட்டு ரஜினியை சென்னைக்கு அனுப்பிவிட்டாராம். தாராவியில் ரஜினி சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளுக்காக சென்னையில் உள்ள ஒரு தீம்பார்க்கில் தாராவி போன்ற செட், பலகோடி செலவில் தயாராகி வருகிறது. மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாராவி செட்டில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்த ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும், இத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஓவர்…

சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஓவர்…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சந்தானம் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கதாநாயர்களுக்கு துணையாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம், சமீப காலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே அப்படித்தான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில், இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. இதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற வேலைகள் முடிக்கப்பட்ட பின் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவிற்கு வந்த சிக்கல் – ஏஏஏ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்

சிம்புவிற்கு வந்த சிக்கல் – ஏஏஏ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சிம்பு நடித்து வரும் ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில காட்சிகளை எடுக்க தாய்லாந்திற்கு சென்றது படக்குழு. ஆனால், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து வெறும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், உடனே அங்கிருந்து திரும்பி வாருங்கள் என கூறிவிட்டாராம். இதனால், தாய்லாந்திற்க
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம