குறிச்சொல்: surya

சூர்யா ஜோடியாக ப்ரியாவாரியர்?

சூர்யா ஜோடியாக ப்ரியாவாரியர்?

சற்றுமுன், செய்திகள்
ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் ஆகியவை அடங்கிய ஒருசில வினாடி அடங்கிய வீடியோவால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரியாவாரியர். 'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசர் ஏற்படுத்திய பரபரப்பு அனேகமாக வேறு எந்த பட டீசரும் ஏற்படுத்தியிருக்காது இந்த நிலையில் ப்ரியாவாரியருக்கு தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் அவர் அடுத்த படத்தில் ஒப்பந்தமாக முடியும் என்ற நிலை அவருக்கு உள்ளதாம் இந்த நிலையில் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ப்ரியா வாரியரை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை முடியுந்தாருவாயில் இருப்பதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தோல்வியை மறைக்க கார் பரிசா? சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்

தோல்வியை மறைக்க கார் பரிசா? சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்

சற்றுமுன்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிகப்பு நிற கார் பரிசளித்துள்ளதுதான் இன்றைய ஹாட் டாக். ஆனால் இந்த பரிசு விநியோகிஸ்தர்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்படி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.36 கோடிக்கு பிசினஸ் ஆனதாகவும், ஆனால் இந்த படம் ரூ.20 கோடி மட்டுமே வசூலானதால் விநியோகிஸ்தர்களுக்கு ரூ.16 கோடி நஷ்டம் என்றும் கூறப்படுகிறது. நஷ்டத்தை மறைக்கவே சூர்யா, இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளதாகவும் இது தங்களை அவமதிக்க்கும் வகையில் இருப்பதாகாவும் விநியோகிஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர்.
சூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

சூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

சற்றுமுன், செய்திகள்
சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு NGK என்ற டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன விரிவாக்கம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. NGK என்றால் நந்த கோபாலன் குமாரன் என்று அர்த்தமாம். இதை படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் இந்த விஷயம் நேற்றே கசிந்துவிட்டது படக்குழுவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  
மீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி?

மீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி?

சற்றுமுன், செய்திகள்
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்களின் மாபெரும் பெற்றதோடு, 50 நாட்கள் என்ற மைல்கல்லையும் திரையரங்குகளில் பெற்றது. பெரும் நட்சத்திர கூட்டம், விறுவிறுப்பான திரைக்கதை, அனிருத்தின் இசை ஆகியவை இந்த படத்தின் பலம் ஆகும் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த டுவிட்டர் உரையாடலில் சூர்யாவும், விக்னேஷ் சிவனும் மீண்டும் இணையவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை ரீமேக் படமாக இல்லாமல் விக்னேஷ் சிவனின் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பிசியாக உள்ளார். இருவரும் தங்களின் தற்போதைய பணிகளை முடித்தவுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
வேறு சேனலுக்கு கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?

வேறு சேனலுக்கு கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?

சற்றுமுன், சின்னத்திரை
ஹிந்தியில் சக்க போடு போட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த வருடம் தமிழுக்கு முதன் முதலாக வந்தது. இந்த நிகழ்ச்சசியானது பல்வேறு விதமான சா்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுவும் இதை முன்னணி நாயகனாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றவுடன் பெரிய அளவில் ரசிகா்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. சிறியவா் முதல் அனைத்து தரப்பினரையும் மற்றும் டிவி பார்க்காதவா்களை கூட கமலுக்காக இந்த நிகழ்ச்சி தன்பக்கம் இழுத்து வந்தது. அதுவும் சனி மற்றும் ஞாயிறு கமல் வருகிறார் என்பதற்காகவே டிவியின் முன் அமா்ந்து விடுவார்கள் ரசிகா்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் சேனலின் டிஆா்பி ரேட் அதிகரித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வந்தன. சீசன் 2யை பிரபல நடிகா் சூா்யா தொகுத்து வழங்குவதாகவும் அல்லது அரவிந்த்சாமி தொகுத்து வழங்க இருப
அப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங்

அப்படியெல்லாம் செய்தால் படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் ரகுல் ப்ரீத்சிங்

சற்றுமுன், செய்திகள்
ரகுல் ப்ரீத் சிங், கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் ரகுல் ஸ்பைடா் படத்தை ரொம்பவும் நம்பியிருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. படம் வந்த வேகத்திலேயே திரும்பி போய் விட்டது. இந்த படத்தினால் தமிழ்,தெலுங்கில் தனது சினிமா படவாய்ப்புகள் தன்னை தேடும் வரும் என்று மனக்கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் அவருடைய அந்த எண்ணம் பலிக்கவில்லை. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சூா்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஆனால் இந்த படத்தில் இரண்டாவது நாயகி தான் ரகுல் என்று பேச்சு அடிப்படுகிறது. இதைபற்றி ரகுல் கோபமாக பேசியுள்ளார். அவா் கூறிய என்னவெனில், நான் நடித்து வரும் எல்லாம் படங்களிலும் முதன்மை ஹீரோயினாக தான் நடித்து வருகிறேன். என்னுடன் நடிக்கும் படங்களில் இரண்டு மூன்று நாயகிகள் நடித்தாலும், அதை எல்லாம் காரணம் சொல்லி எனக்
ஐந்து அக்காவுக்கு தம்பியாக கார்த்தி

ஐந்து அக்காவுக்கு தம்பியாக கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
கடைக்குட்டி சிங்கம் படமானது விவசாயத்தை மையமாக வைத்து சூா்யாவின் 2டி எண்டா்டென்மெண்ட் நிறுவனம் சார்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாயிஷா மற்றும் பவானி ஷங்கா், அர்த்தனா என மூன்று நாயகிகளாக நடித்துள்ளனா். அண்ணன் சூா்யா தம்பி கார்த்திக்காக முதல் முறையாக தயாரிக்கும் படம். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஐந்து போ் நடித்திருக்கின்றனா். கார்த்தி தான் கடைக்குட்டி. அந்த காரணத்தால் தான் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயா் வைத்துள்ளனா். சத்யராஜ் அப்பாவாக நடித்திருக்கிறார். மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவதா, இந்துமதி என அக்காக்களாக 5போ் நடித்துள்ளனா். இந்தபடத்தில் விவசாயத்தின் மூலம் ஒன்றை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வெயிட்டான வேடத்தில் கார்த்தி  நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்
பிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா?

பிக்பாஸ்2 சீசன்: யார் யார் பங்கு பெறுகிறார்கள் தெரியுமா?

சற்றுமுன், சின்னத்திரை
அனைவருடைய கவனத்தை தன் பக்கம் திருப்பி போட வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனா். இதை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. அதுவும் டிவி பார்க்கதவரையும் சனி மற்றும் ஞாயிறு அன்று கமலுக்காகவே பார்க்கும்படி வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.அந்த நிகழ்ச்சியும் ஒரு வழியாக பல சா்ச்சைகளுக்கு இடையில் 100 நாட்களை கடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 தொடங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் செய்த நல்லது கெட்டது இதன் மூலம் வெளியுலகத்திற்கு பாடம் பிடித்து காட்டப்பட்டது. ஒரு சிலா் தங்களது நல்ல செய்கைகளால் நல்ல பெயரை பெற்றனா். சிலருக்கு கெட்ட பெயா் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பல பேருக்கு பிக்பாஸ் மே
சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

சற்றுமுன், செய்திகள்
அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் அடுத்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளார் இந்த நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர். தானா சேர்ந்த இந்த 4 மில்லியன் ஃபாலோயர்களுக்கு சூர்யா தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.