குறிச்சொல்: Vadachennai

வடசென்னை ரிலீஸ் எப்போது? தனுஷின் ரகசிய திட்டம்

வடசென்னை ரிலீஸ் எப்போது? தனுஷின் ரகசிய திட்டம்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் இந்த கூட்டணியின் அடுத்த படமான வடசென்னை படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதிலும் ஜூன் மாதம் ரம்ஜான் திருநாள் வருவதை அடுத்து அந்த நாளில் வெளியிட தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷை இயக்கும் மூன்று முன்னணி இயக்குனர்கள்

ஜிவி பிரகாஷை இயக்கும் மூன்று முன்னணி இயக்குனர்கள்

சற்றுமுன், செய்திகள்
பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. முதல்முறையாக ஜிவி பிரகாஷை நடிக்க வைத்த பெருமைக்குரியவர் பாலா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் நாச்சியார் வெற்றிக்கு பின்னர் மூன்று பிரபல இயக்குனர்கள் ஜிவி பிரகாஷிடம் கதை கூறியுள்ளனர். அவர்கள் 'அறம்' இயக்குனர் கோபி, வசந்தபாலன் மற்றும் இயக்குனர் ராம் மூன்றுமே வெவ்வேறு ஸ்கிரிப்டுகள் என்பதால் மூன்றையும் ஒப்புக்கொள்ள ஜிவி பிரகாஷ் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
அறம் இயக்குனரின் அடுத்த படத்தில் ‘காத்து’ ஜிவி பிரகாஷ்

அறம் இயக்குனரின் அடுத்த படத்தில் ‘காத்து’ ஜிவி பிரகாஷ்

சற்றுமுன், செய்திகள்
பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தில் காத்து என்ற கேரக்டரில் நடித்த ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தற்போது அறம் இயக்குனர் கோபிநயினார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வடசென்னை பின்னணியில் கிரிக்கெட் வீரராக ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார். 'அறம்' படம் போலவே உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இந்த படத்திலும் அதிகம் இருக்குமாம் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து ஓகே பண்ணிய மணிரத்னம்

ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து ஓகே பண்ணிய மணிரத்னம்

சற்றுமுன், செய்திகள்
      'காக்கா முட்டைக்கு முன்னாடியும் அட்டக் கத்தி போன்ற சில படங்கள் பண்ணியிருக்கிறேன். ஹீரோயினா நடிக்க முயற்சி பண்ணினப்ப அது உங்களுக்கு செட் ஆகாது, வேணும்னா ப்ரெண்ட், சிஸ்டர் காரெக்டர் ட்ரை பண்ணுங்கன்னும் சொல்வாங்க. இல்லைன்னா காமெடியனுக்கு ஜோடியா நடிக்கச் சொன்னாங்க. பெரிய இயக்குனர்கள் கூட அப்படி சொல்லியிருக்காங்க. காக்கா முட்டை தான் பெரிய ப்ரேக். இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவா நடிச்சு இப்படிப்பட்ட ப்ரேக் கிடைச்சது' என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கும் வட சென்னை, மணி ரத்னம் புதிய படம், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் என்று பெரிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.        மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்ட போது, 'எனக்
அஜித்தும் விஜய்யும் இந்த விஷயத்துல ஒண்ணுதான்: சொல்கிறார் பிரபல வில்லன் நடிகர்

அஜித்தும் விஜய்யும் இந்த விஷயத்துல ஒண்ணுதான்: சொல்கிறார் பிரபல வில்லன் நடிகர்

சற்றுமுன், செய்திகள்
அஜித்-விஜய்யும் தொழில்முறையாக போட்டி போட்டுக் கொண்டாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்தான். இந்நிலையில், இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை பற்றி வில்லன் நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்துவரும் டேனியல் பாலாஜிதான். இவர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல், விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவருடனும் நடித்திருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி டேனியல் பாலாஜி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, நான் படங்களை தாண்டி இவர்கள் இருவரிடமும் கவனித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது.   படப்பிடிப்பு நடக்கும்போது சரியான நேரத்துக்கு இரண்டு பேரும் வந்துவிடுவார்கள். அதேபோல், வந்தவுடனே அனைவருக்
வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் அதில் நடிக்க இருந்த சமந்தா அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார். மேலும், தனுஷ், கொடி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பின் விஐபி 2 படத்தில் நடித்து முடித்தார். கூடவே பவர்பாண்டி படத்தையும் இயக்கி முடித்தார். தற்போது ப.பாண்டி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, வட சென்னை படத்தின்
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம