குறிச்சொல்: Vijay sethupathi

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் அஞ்சலி

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் அஞ்சலி

சற்றுமுன், செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி ஜோடியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார். கே புரடொக்சன்ஸ் ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தென்காசி மற்றும் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனா? தம்பியா?

விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனா? தம்பியா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கிய பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியது. அவா் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் நாம் அறிந்ததே. இந்நிலையில் அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் அதுவும் அவா் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. புதிய தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி இயக்குநா் பா.ரஞஞ்சித் இயக்கத்தில் காலா படத்திலும் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்திருப்பதை அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதன் முதலாக ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே பீட்சா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இ
விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்த கதிருக்கு திருமணம்

விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்த கதிருக்கு திருமணம்

சற்றுமுன், செய்திகள்
மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கதிர், அடுத்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் விக்ரம் வேதா படம்தான் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்து தன் முத்திரையை பதித்துள்ளார். கதிர் திருமணம் வரும் ஞாயிற்று கிழமை அன்று ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் வைத்து நடைபெற இருக்கிறது. தற்போது கதிர் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து வருகிறார். இதோடு சத்ரு, சிகை உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். நடிகா் கதிருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சியத்திருக்கிறார்கள். ஈரோட்டைச் சோ்ந்த தொழில் அதிபரான வாசுதேவன்,ஜெயந்தி தம்பதிகளின் மகளான சஞ்சனாவுக்கும் கதிருக்கும் திருமணம் பெற்றோர்களால் நிச்சியிக்கப்பட்டுள்ளது. ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் வைத்து வருகிற 4ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாலை
ரஜினி படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

ரஜினி படத்தில் விஜய்சேதுபதி வில்லனா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்று படங்களில் நடித்த விஜய்சேதுபதி இந்த படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது குறிப்பாக அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே விஜய்சேதுபதி வில்லனாக நடித்த 'விக்ரம் வேதா; திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாலும், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதே ஒரு பெருமை என்பதாலும் அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நான் நல்லவனும் இல்லை, நல்லவனேயும் இல்லை: விஜய்சேதுபதி

நான் நல்லவனும் இல்லை, நல்லவனேயும் இல்லை: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய்சேதுபதிக்கு சிறந்த வில்லன் என்ற விருது வழங்கப்பட்டது. 'விக்ரம் வேதா' படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி கூறியதாவது: உண்மையில் விக்ரம் வேதா' படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை. எனக்கும் மாதவனுக்கும் சம அளவிலான கேரக்டர். நான் அந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்று கூறினார். மேலும் நிஜவாழ்க்கையிலும் நான் வில்லை. அதற்காக நான் முழு நல்லவனும் அல்ல. நான் நல்லவனும் இல்லை, நல்லவனேயும் இல்லை என்று விஜய்சேதுபதி நகைச்சுவையுடன் கூறினார். மேலும் தான் தற்போது நடித்து வரும் 'ஜூங்கா' திரைப்படம் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடு செதுக்கப்பட்டு வரும் படம் என்றும் அவர் தெரிவித்தார்.
மணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

மணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

சற்றுமுன், செய்திகள்
  காற்று வெளியிடை படைத்தை அடுத்து மணிரத்னம் அடுத்தப்படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்குகிறார். வழக்கம்போல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் சேர்ந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்தின் முதல் பேஸ்டர் இன்று வெளியானது.
மாரி 2 வில் இணையும் பிரபல நட்சத்திரம்

மாரி 2 வில் இணையும் பிரபல நட்சத்திரம்

சற்றுமுன், செய்திகள்
தற்போது தனுஷ் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதை பாலாஜி மோகன் இயக்குகிறார். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். மாரி 2 படத்தில் தற்போது இன்னொரு நபா் இணைய உள்ளார். அது தனுஷ் இயக்கி பவா் பாண்டி படத்தில் ராஜ்கிரண் பேரனாக நடித்த மாஸ்டா் ராகவ் தான் இந்த படத்திலும் நடிக்கிறார். இவா் ஏற்கனவே சேதுபதி படத்தில் சின்ன வயது விஜய்சேதுபதியாக மாஸ்டா் ராகவ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மூன்று மாதங்களில் நான்கு படங்கள் ரிலீஸ்: விஜய்சேதுபதியின் திட்டம்

மூன்று மாதங்களில் நான்கு படங்கள் ரிலீஸ்: விஜய்சேதுபதியின் திட்டம்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக படங்கள் நடித்த நடிகர் விஜய்சேதுபதிதான். திரையுலகிற்குள் நுழைந்த ஒருசில ஆண்டுகளில் அவர் தனது 25வது படத்தை முடித்துவிட்டார்' இந்த நிலையில் வரும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜய்சேதுபதி நடித்த நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படமும் மார்ச் மாதத்தில் ஜூங்கா' படமும் ஏப்ரலில் சீதக்காதி மற்றும் 96 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர இமைக்கா நொடிகள், சூப்பர் டீலக்ஸ், நரசிம்ம ரெட்டி, மணிரத்னம் படம் ஆகிய படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளிவரவுள்ளது.
சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது., இந்த டீசரில் ஒருவரின் தலையை சமந்தா வெட்டுவது போன்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதுவரை காதல் பதுமையாக மென்மையான கேரக்டர்களில் நடித்து வந்த சமந்தா, இந்த படத்தில் கொலைகாரியாக நடித்திருப்பதாகவும், அவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் படம் பார்ப்பவர்களுக்கு தெரியவரும்போது திடுக்கிடை வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் இந்த படத்தின் நாயகன் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சீனுராமசாமி

சற்றுமுன், செய்திகள்
விஜய்சேதுபதி நடித்த 'தென்மேற்கு பருவக்காற்று, 'தர்மதுரை போன்ற படங்களை இயக்கிய சீனுராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக சீனுராமசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் என தெரிகிறது. உதயநிதி தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.