குறிச்சொல்: vijay

சிங்கப்பூர் திரைப்பட விழாவில் விஜய் நடித்த மூன்று படங்கள்

சிங்கப்பூர் திரைப்பட விழாவில் விஜய் நடித்த மூன்று படங்கள்

சற்றுமுன், செய்திகள்
சிங்கப்பூரில் தற்போது Film Festival Carnival விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து பல மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் முறையே விஜய் நடித்த பைரவா, மெர்சல், தெறி ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் இந்த விழாவில் ரஜினி, கமல், அஜித் உள்பட பிரபல நடிகர்களின் படங்கள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
‘கத்தி’ போல் டபுள் ஆக்சன்: தொடக்க விழாவில் கசிந்த தகவல்

‘கத்தி’ போல் டபுள் ஆக்சன்: தொடக்க விழாவில் கசிந்த தகவல்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிக்கும் 62வது படமான 'தளபதி 62' படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் இந்த படத்தின் கெட்டப்புடன் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த போட்டோஷூட் படங்களுக்கும், இன்றைய கெட்டப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால் இந்த படத்திலும் 'கத்தி' போல் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் விஜய் நடிக்கும் ஒரு வேடம் நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பூஜை அன்றே இந்த படத்தின் தகவல்கள் கசிய தொடங்கிவிட்டதால் இன்னும் என்னென்ன இருக்குமோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
வேகத்தில் ஒரு விவேகம் வேண்டாமா? விஜய் ரசிகர்களை கலாய்த்த நெட்டின்சன்கள்

வேகத்தில் ஒரு விவேகம் வேண்டாமா? விஜய் ரசிகர்களை கலாய்த்த நெட்டின்சன்கள்

சற்றுமுன், செய்திகள்
இளளயதளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் விஜய் கிளாப் அடிக்கும் ஸ்டில் இணணயதளத்தில் வைரலானது உடனடியாக அந்த ஸ்டில்லை போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம் என்பதற்கு பதிலாக 'இன்று முதல் பாடபிடிப்பு துவக்கம்' என்று அச்சடித்துள்ளனர். மின்னல் வேகம் இருந்தால் மட்டும் அந்த வேகத்தில் ஒரு விவேகம் வேண்டும் என்று நெட்டிசன்கள் குறிப்பாக அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.
விஜய்க்கு விட்டு கொடுத்ததை மீண்டும் கைப்பற்றி கொண்ட ராகவா லாரன்ஸ்

விஜய்க்கு விட்டு கொடுத்ததை மீண்டும் கைப்பற்றி கொண்ட ராகவா லாரன்ஸ்

சற்றுமுன், செய்திகள்
கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடித்த 'பைரவா; திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலை முதலில் ராகவா லாரன்ஸ்தான் பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் விஜய் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தார். இந்த நிலையில் விஜய்க்காக விட்டு கொடுத்த 'பைரவா' தலைப்புக்கு முன் 'காலா'வை சேர்த்து தனது அடுத்த படத்திற்கு 'காலபைரவா' என்ற டைட்டிலை ராகவா லாரன்ஸ் தேர்வு செய்துள்ளார். இந்த படத்திற்கு 'மெர்சல்' கதாசிரியர் ராஜேந்திரபிரசாத் திரைக்கதை எழுதவுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை தவிர மேலும் இரண்டு படங்களையும் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சென்னையில் 30, கொல்கத்தாவில் 60: விஜய் 62 படத்தின் மாஸ்டர் பிளான்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் பூஜை சற்றுமுன்னர் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று முதல் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. மேலும் சென்னையில் 30 நாட்களும், கொல்கத்தாவில் 60 நாட்களும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் செப்டம்பருக்குள் முடித்துவிட்டு இவ்வருட தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய், கீர்த்திசுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய்க்கு இங்கிலாந்து நாட்டின் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான விருது பட்டியலில் விஜய் பெயரும் உள்ளது. இந்த விருதை விஜய் வெல்ல வேண்டுமானால் வரும் 20ஆம் தேதிக்குள் அதிக வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாக வேண்டும் விஜய்க்கு இந்த விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் இரவுபகலாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் இந்த இணையதளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வைரஸ் தாக்குதலால் விஜய் ரசிகர்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு கிடைக்க விருது கையைவிட
விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவின் புதிய அசத்தலான புகைப்படங்கள் இதோ:
அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

சற்றுமுன், தமிழகம்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. வேலைக்காரன் படத்தின் ஹிட்டை தொடர்ந்து அஜித்துடன் மோகன் ராஜா இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கோலிவுட்டில் கூறப்பட்டது இந்த நிலையில் திடீரென மோகன்ராஜாவை இன்று சந்தித்த தளபதி விஜய், 'வேலாயுதம் 2' படத்திற்கான கதையை தயார் செய்யும்படியும் முருகதாஸ் படத்தை அடுத்து வேலாயுதம் 2' படத்தை தொடங்கலாம் என்று விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கான திரைக்கதையை தயாரிக்கும் பணியை மோகன்ராஜா நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் விகடன் அறிவித்தது. இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் விழாவில் விகடன் விருதினை நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
இதுவரை வெளிவராத காஜல் அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள்

இதுவரை வெளிவராத காஜல் அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
கடந்த் ஆண்டு அஜித், விஜய் உள்பட பெரிய நடிகர்களின் நாயகியான காஜல் அகர்வாலின் இதுவரை வெளிவராத கலக்கலான புகைப்படங்கள் இதோ: