ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: vishal

மருத்துவமனையில் விஷால்

மருத்துவமனையில் விஷால்

சற்றுமுன், செய்திகள்
படப்பிடிப்பின்போது நடிகா் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தின் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகா் சங்கத்தின் பொருளாளராகவும், சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகராகவும் என பன்முக கொண்டவா் விஷால். இவா் பிசியாக நடித்துக்கொண்டும், சங்க பணிகளையும் கவனித்துக்கொண்டு வரும் அவா் மித்ரன் இயக்கத்தில் சமந்தாவுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.இந்நிலையில் இரும்புத்திரை படத்தை தொடா்ந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சண்டைக்கோழி படத்தை லிங்குசாமி இயக்கத்தில் மாஸ் ஹிட்டை அடித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள சண்டைக்கோழி 2 வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்
விஜய் ரசிகர் விஷாலுக்கு வில்லனா? புதிய தகவல்

விஜய் ரசிகர் விஷாலுக்கு வில்லனா? புதிய தகவல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் விஜய் ரசிகர்கள் குறித்த ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். போக்கிரி சைமன்' என்ற இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அப்பானி சரத் இவர் ஒரு தீவிர விஜய் ரசிகராக அந்த படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் அப்பானி சரத் தற்போது விஷாலின் சண்டக்கோழி 2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது விஷால் மற்றும் மணிரத்னம் படத்தில் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்பானி சரத், தமிழில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறியுள்ளார்
கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

சற்றுமுன், செய்திகள்
நடிகை அமலாபால் தி. நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்த்தார். அதில் நடனப்பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அமலாபாலின் இந்த துணிச்சலைப் பாராட்டி தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த விஷாலுக்கு அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி விஷால். பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டை போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலாக இருந்தது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அரசியல் பயணம் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செல்லவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, மூவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதனை அவர் உறுதி செய்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

சற்றுமுன், செய்திகள்
ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு ரஜினி, கமல் உள்பட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் இந்த விழாவின்போது விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் டிரைலர் மற்றும் அவர் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளதாம் இந்த நிலையில் இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவா? அல்லது விஷாலின் திரைப்பட கலைவிழாவா? என்று முனங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் தவிர வேறு படங்களின் புரமோஷன் இந்த விழாவின் இடையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நாயகியாக விஷால் காதலி

தனுஷ் நாயகியாக விஷால் காதலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் நடிகர் சரத்குமாரின் மகளும், விஷாலின் காதலி என்று சொல்லப்படுபவருமான வரலட்சுமி, தனுஷின் அடுத்த படமான 'மாரி 2' படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'மாரி' படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவரே நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென இன்று வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரலட்சுமியின் வரவால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதேபோல் இந்த படத்தில் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு நபர் இசையமைப்பாளர் அனிருத். ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

சற்றுமுன், செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த 'இரும்புத்திரை' டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து நகைச்சுவை கருத்தை விஷால் தெரிவித்தார் நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது பலர் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன். நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் 'இரும்புத்திரை' திரைப்படம் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். எனவேதான் மித்ரன் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று சாமியை கும்பிட்டார். அவருடைய வேண்டுதல் பலித்துவிட்டது. என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால், நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் நடக்கிறேன். கண்ணாடிதான் என் நண்பன். என்று விஷால் பேசினார்.
இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்களை பார்ப்போம்
விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா பேசியதாவது: நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களை சார், சார் என மரியாதையுடன் கூப்பிடுவேன். அவர்களுடன் நெருக்கமாக பழக தயங்குவேன். ஆனால் விஷாலுடன் நடிக்கும்போது எனக்கு ஜாலியாக இருந்தது என்னைவிட இளையவருடன் பழகுவது போன்று சகஜமாக பழகினேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து வாய்ப்பு கொடுத்த விஷாலுக்கும், இயக்குனர் மித்ரனுக்கும் எனது நன்றி 'பாணா காத்தாடி' படத்திற்கு பின்னர் யுவன் இசையில் நடிக்கும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்' என்று சமந்தா பேசினார்
பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஷால், சமந்தா நடித்த கேரக்டர்கள் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர் இதன்படி விஷால் மேஜர் ஆர்.கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா டாக்டர் ரதிதேவி பி.எச்.டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். மேஜர் விஷால், சைக்காலஜி டாக்டருடன் கைகோர்த்து எதிரிகளை பந்தாடுவது தான் கதையாம் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.