நடிகை தமன்னா அவ்வப்போது தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருபவர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் ஜம்முவில் 8 வயது சிறுமி 8 நாட்களாக 8 கொடூர மனிதர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமன்னா தனது டுவ்ட்டரில் ஆவேசமாக கூறியுள்ளதாவது:
‘ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது. நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடைவு கொண்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
இவ்வாறு தமன்னா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்