தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக இருக்கும் தமன்னா, விக்ரமுடன் நடித்த ஸ்கெட்ச் வரும் பொங்கல் நாளில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் தமன்னா தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்ப்நதமாகியுள்ளார்.

கல்யாண்ராம் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் காதலர்களை சேர்த்து வைக்கும் ‘காதல் புரோக்கர்’ கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் அவர் எப்.எம் வானொலியில் ஆர்ஜே வேலை செய்பவராகவும் நடிக்கவுள்ளாராம்

படம் முழுக்க ரொமான்ஸ் காட்சிகள் சொட்ட சொட்ட படமாகி வரும் இந்த படம் தமன்னாவுக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது