Home சற்றுமுன் விஷாலுடன் மீண்டும் இணையும் தமன்னா

விஷாலுடன் மீண்டும் இணையும் தமன்னா

விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா மீண்டும் நடிக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். ஏற்கெனவே சுந்தர் சி இயக்கத்தில் மதகஜ ராஜா படத்தில் விஷால் நடித்திருந்தார். அந்த படம் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை வெளியாகவில்லை. பின்னர் ஆம்பள என்ற படத்தில் நடித்தார். அந்த படம் சுமாராக போனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தில் தமன்னா நடிக்கிறார். ஏற்கெனவே கத்திச்சண்டை படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.