ஹிந்தியில் ரஜினி, அமிதாப், ஷாருக், சல்மான் என அனைவரையும் வைத்து படம் இயக்கிய மூத்த இயக்குனர் கேசி.பொகாடியா, இயக்குனர்கள் மணிவண்ணன், அதியமான், எஸ்.ஏ சந்திரசேகர் போன்றோரை இவர்தான் ஹிந்தியில் அறிமுகம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' பட சிங்கள் டிராக்: இன்று மாலை வெளியீடு!

இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ராக்கி. முன்பு இவர் இயக்கி ஜாக்கி ஷெராஃப் நடித்த தெரி மெஹர் பானியா என்ற படத்தின் ரீமேக்காக, ராக்கி உருவாகிறது.

ஸ்ரீகாந்த், இஷானியா மகேஸ்வரி, பிரம்மானந்தம், நாசர், ஓ.ஏ.கே.சுந்தர், ஷாயாஜி ஷிண்டே, கராத்தே ராஜா நடித்துள்ளனர். சிறுவயதில் பிரிந்து சென்ற சகோதரர்களை பற்றிய இந்த கதையில், முக்கிய வேடங்களில் 2 நாய்கள் நடிக்கின்றன.