தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி வரும் ஜனவரி 21ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் மாநில மகளிர் பள்ளியில் முதல்வர் பழனிசாமி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய வேண்டுகோள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன், 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அங்கன்வாடிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக மாநில அளவில் 2 ஆயிரத்து 381 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன், அருகருகே உள்ள அங்கன்வாடிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை மும்முரமாக நடந்த வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய வேண்டுகோள்

இந்த பள்ளி வளாகங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி சிறுவர், சிறுமியரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கன்வாடிகள் இணைக்கப்பட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.