தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழக வானிலை நிலவரம் குறித்து பதிவிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆனால்,வரும் நாட்களில் மழையின் அளவு படிப்படியாக உயரும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமாம்.

பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமாம். 15 மணி நேரத்திற்கு பின்னர், சென்னையின் வடக்கே நெல்லூர் அருகே படிப்படியாக மேகக் கூட்டங்கள் உருவாகி சென்னையில் பரவலாக லேசான சாரல் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துளார்.

இறுதியாக கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப் பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளில் இன்று முதல் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு என்று பதிவிட்டுள்ளார்.