ஒரு காலத்தில் விஜய் டிவியில் வந்தது லொள்ளு சபா எல்லா திரைப்படங்களையும் வரலாறு காணாத அளவு கலாய்ப்பார்கள். இதன் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம் இன்று தொட முடியாத உயரத்தில் உள்ளார்.

இதுபோல முறையில்  கடந்த 2010ம் வருடம் வெளிவந்த படம்தான் தமிழ்படம் அந்த நேரத்தில் பார்முக்கு வந்திருந்த சென்னை 28ல் ஹீரோவாகி புகழ்பெற்றிருந்த சிவாவின் நடிப்பில் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் வந்தது. தியேட்டருக்கு சென்ற நம்மை வயிற்றுவலியோடுதான் அனுப்பி வைத்தது அந்த அளவு சிரிப்புமழை படத்தில் இருந்தது.

தமிழில் வந்த ஏறத்தாழ பல விதமான படங்களை போதும் போதும் என்கிற அளவு கலாய்த்து எடுத்திருந்தனர் இந்த டீம்

படத்தின் ஓப்பனிங் சீனிலேயே சென்னை சென் ட்ரல ரயில் நிலையத்தை காண்பித்தவுடன் ஒருவர் வந்து கலாய்ப்பார்.அதாவது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக சென்னைக்கு வரும் ஹீரோவுக்காக கொடுக்கப்படும் அடையாளம்தான் அந்த சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்,

இயக்குனர் மணிரத்னத்தின் தளபதி படத்தை கூட விட்டுவைக்கவில்லை

ஆஸ்பத்திரியில் அடிபட்டு படுத்திருக்கும் ரஜினி கேரக்டரை மம்முட்டி கேரக்டர் பார்க்க போகும் ஒரு காட்சி ,டாக்டர் மருத்துவத்துக்கான பில்லை நீட்டுவார்.

டாக்டர் பில்லை நீட்டுவார்

மம்முட்டி: என்ன

டாக்டர்:பில்லு

மம்முட்டி :இல்ல

மணிரத்னம படத்தின் ஒற்றை வரி டயலாக்கை இப்படி கலாய்த்திருப்பர் இப்படியாக இந்த படத்தில் பலவற்றை கூறலாம்.

இந்நிலையில் தமிழ்ப்படம் 2 வை அதே டீம் இயக்கி ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது.இதில் முன்னாள் முதல்வர் தியானம் செய்த காட்சிகள்தான்  டிரெய்லரில் இடம் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

சென்ற படத்தில் நண்பர்களாக வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா,எம்.எஸ் பாஸ்கர் நடித்திருந்தனர் இந்த படத்தில் இயக்குனர் சந்தானபாரதி, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்,மனோபாலா போன்றோர் சிவாவின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகத்தை கூட கலாய்த்து எடுத்திருப்பதால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலில் உள்ளனர் ரிலீஸ் தேதி அனேகமாக 13ம்தேதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.

இஷ்டத்திற்க்கு இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.