திரையுலகை கிண்டலடித்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப்படம் 2’ என்ற படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் ஏற்கனவே சிவாவுடன் திஷா பாண்டே, சந்தானபாரதி, கலைராணி, மனோபாலா, உள்பட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் ‘விஸ்வாசம்’ வசூல் பற்றி வாய்திறந்த தயாரிப்பாளர்!

இவர் ஏற்கனவே ஒருசில மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சி.எஸ்.அமுதன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது