சி.எஸ் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

இப்படம் வந்த புதிதில் ஏதோ சிவா படம் என்று தியேட்டருக்கு வந்தவர்கள் படத்தில் இவ்வளவு கலாய்ப்பா என்று சிரித்து சிரித்து வயிற்றுவலியுடன் தான் சென்றனர்.

அந்த அளவு இதுவரை வந்த தமிழ் சினிமா அனைத்தையுமே கலாய்த்திருந்தனர் கிட்டத்தட்ட முதல் படத்திலேயே 75 வருட தமிழ்சினிமாவின் பெரும்பாலான காட்சிகளை கலாய்த்துவிட்டார் இயக்குனர் அமுதன்.

இப்போது தமிழ்ப்படம் 2 வேலைகள் முடிந்துவிட்டதால் எப்போ இப்படம் ரிலீஸ் ஆகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலில் காத்துள்ளனர்.இதுவரை ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடாத

இப்பட இயக்குனர் அமுதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஜூலை 13ம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.