தமிழ் படம் 2வின் அறிமுக பாடல் செம கலாய்ப்பு!

shiva

மிர்ச்சி சிவா நடிப்பில் 8 வருடங்களுக்கு முன் வெளிவந்த தமிழ் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். தமிழ் படம் அனைத்து தரப்பினையும் வெகுவாக கவர்ந்தது. அதில் அனைத்து படங்களை வைத்து கலாய்த்து இருந்தனர். அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தமிழ்ப்படம் 2.0 என்று தயாராகி இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப் படம் 2.0 என்ற பெயரில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் அறிமுக பாடல் வெளியாகி பட்டைய கிளம்பி வருகிறது.

ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் லுக் டீஸர் அனைத்து ஹீரோக்களின் படங்களை கலாய்த்து வெளிவந்து ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக தற்போது நடைபெறும் சம்பவங்களை வைத்து கலாய்த்து போஸ்டர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற வெங்காய பிரச்சனையை கூட வைத்து கலாய்த்து இருக்கின்றனர்.

தமிழ் படம் 2வில் சிவாவின் அறிமுகபாடல் இன்று 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வந்ததியிலிருந்து ரசிகர்களுக்கிடையே அந்த வீடியோவில் யார் யார் எல்லாம் வைத்து கலாய்த்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவா ஏற்பட்டது. நான் யாருமில்லை என்று தொடங்கும் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பாடல் சுனாமியின் பினாமியே என்று தொடங்கி ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்று கூறி மெர்சல் விஜய் போன்று சைகையில் கை காட்டுகிறார் சிவா. நான் எப்ப வருவேன், எங்க வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஏன்னா நான் வரவே மாட்டேன் என்று ரஜினியை வைத்து கிண்டலடித்துள்ளனர். இப்படி அஜித், விஜய், கமல், ரஜினி, சிவகார்த்திகேயன் வரை அனைத்து வைத்து செய்துள்ளனர்.

அது போல சூர்யாவை இது தானா சேர்ந்த கூட்டம் இல்லை எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று அவரையும் கூட விடவில்லை. மேலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நான் யுஎஸ் கிளம்பி போய் விடுவேன் என்று கமல், அரசியலில் நான் குதிக்க மாட்டேன், பீச்சில் தியானம் பண்ண மாட்டுன் என பலரையும் வைத்து விளையாடி இருக்கின்றனர்.