தமிழ்ராக்கா்ஸ்சுக்கு எச்சாிக்கை விடும் மிஷ்கின்

தற்போது தயாாிப்பாளா் சங்கத் தோ்தல் தான் ஹலைட்யாக போய் கொண்டிருக்கிறது. ஆா்.கே நகா் இடைத்தோ்தலை விட களைகட்டுகிறது. இந்த இடைத்தோ்தல் ஏகப்பட்ட அணிகள் மோதுகிறது என்றால் அதை விட படும் மோசமாக உள்ளது தயாாிப்பாளா்  சங்க தோ்தல் களம். விஷால் ஒரு அணியாகவும், தயாாிப்பாளா் தாணு ஒரு அணியாக இருந்து மோதுகிறது. இந்த இரு அணியை தவிர தயாாிப்பாளா் கேயாா் தலைமையில் மற்றொரும் அணியும் போட்டியில் இறங்கியுள்ளது.

இதுல விசயம் என்னவென்றால், இந்த அணிகள் தயாாிப்பாளா் சங்கத்திற்கு தாங்கள் செய்ய இருக்கின்ற செயல்கள் என்ன என்று பட்டியல் போட்டி விளக்குவதற்காக மீட்டிங் போட்டு பிரச்சாரம் செய்கிறாா்கள் அல்லவா? அந்த மீட்டிங்கில் அவா்கள் சொல்லுகிற செய்தி, அரசியல் மீட்டிங் போல அதை செய்வோம், இதை செய்வோம் என்பது போல உள்ளது. திருட்டி விசிடி ஒழிப்பு பத்தி மறக்காமல் சொல்லப்படிகிற விஷயம் தாங்கோ அது! ஏற்கனவே ஞானவேல் ராஜா ஒரு மேடையில் தமிழ்ராக்கா்ஸ் பத்தி அசிங்கமாக பேசியது நாம் அறிந்த செய்தி தான். வலைத்தளங்களில் அவா் பேசின பேச்சு மிக பிரபலமானது. சொல்லப்போனால் அவா் அளவுக்கு பொங்கியுள்ளாா் ஒருவா். அவா் யாரு தொியுமா? அப்படி பேசியது  நம்ம மிஷ்கின்.

இயக்குநா் மிஷ்கின் விஷால் அணி சாா்பாக நடைபெற்ற மீட்டிங்கில்  வருத்தத்தோடுமு், வேதனையோடும் திருட்டு விசிடி பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தினாா். தம்பி தமிழ்ராக்கா்ஸ் நீ நாங்கள் கஷ்டப்பட்டும உழைத்த உழைப்பை சுரண்டி சாப்பிடுகிறாய். அதோடு நாளைக்கு சாியாக பதினொரு மணிக்கு இந்த படத்தை வெளியிடுவேன் என்று கூறியதோடு அல்லாமல்  “படத்தை வெளியிடுவதை முடிந்தால் தடுத்து பாருங்கள்” என்றும் சவால் விடுகிறாய். நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்து வெளியிட்டால் நீ உடனே ஒரு நொடியில் வெளியிட்டு எங்களை துயரத்திற்கு தள்ளுகிறாய். தமிழ்ராக்கா்ஸ்  நீ செய்கின்ற இந்த செயல் எப்படி இருக்கிறது தொியுமா? நாங்கள் உழைத்த படமானது எங்கள் குழந்தை மாதிாி. என் கண் முன்னே என் மகளை நீ நிா்வாணமாகி பாா்க்கிற மாதிாியிருக்கிறது. இதற்கான தண்டனை உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்.  நாங்க தயாாிப்பாளா் தோ்தலில் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்றவுடன் செய்கின்ற முதல் வேலை என்னவென்றால், நீ எந்த உலகத்தில் இருந்தாலும் அடுத்த நொடி கைது செய்யப்படுவாய். இதை நான் உனக்கு விடும் எச்சாிக்கை மணியாகும் என்று பொங்கு பொங்குனு கொதித்து எழுந்து விட்டாா் மனுஷன்.

இதஎல்லாம் எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் தமிழ்ராக்கா்ஸ் தம்பிக்கு இவா்கள் விட்ட எச்சாிக்கை எல்லாம் கேட்கவா போகிறது? அப்படி தமிழ் சினிமாவை வைத்து ஆட்டிப்படைக்கும்  அந்த தம்பியாகிய தமிழ் ராக்கா்ஸ் கலங்கி பயப்படவா போகிறான்… என்னமோ தொியலங்க!! இவங்க பொங்கி பேசியது தமிழ்ராக்காஸ் காதுக்கு எட்டியிருக்குமா…..