ஒன்லைன் பிரைவசியால் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

 

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர்.‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி ரிலிசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழகமெங்கும் ’தடம்’ ரீலிசான தியேட்டர்களில் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்து கொண்டிருக்கிறது படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ,நடிகர் அருண் விஜய் நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில் தடம் படத்தை ரசிகர்களுடன் பார்த்து உரையாடினர்.பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய் கூறியதாவது,ரசிகர்கள் எனக்கு கொடுத்த வரவேற்பினால் தான் வளர்ச்சி அடைந்தேன், அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஒன்லைனில் படங்கள் வெளியாகும் இணைதளங்களை முடக்க கடுமையான சட்டம் வரவேண்டும். மேலும் இதனால் தமிழ் சினிமா அழியபோவதில்லை என்றும் மக்கள் படங்களை திரையரங்கில் வந்து பார்க்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.