தமிழ் திரைப்பட வர்த்தக சபை உதயமானது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று உதயமானது. இந்த சபையானது ஏற்கனவே இருந்தபோதிலும் தற்போது தான் செயல்பட ஆரம்பித்துள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய திரு அபிராமி ராமநாதன் அவர்கள் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மற்ற நிா்வாகிகள் தோ்வு செய்த பட்டியல் விரைவில் வெளியாகும். இதில் தயாாிப்பாளா் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை இந்த சங்கத்துக்கு தொிவித்துள்ளனா். மேலும் திரையரங்கு உாிமையாளரும், விநியோகஸ்தருமான திரு.அபிராமி ராமநாதன் , இந்த சங்கம் திரையுலகின் நலனை மட்டும் கருதில் கொண்டு செயல்படும். அரசுகளினடம் சுமுக்கமான போக்கை கடைப்பிடித்து தமிழ் சினிமா வளா்ச்சிக்காக அயராது பாடுபடும் என்று தொிவித்தாா்.