மதுரையை சேர்ந்தவர் ஆப்ரகாம் சாமுவேல் (27). இவர் அமெரிக்காவின் கிளார்க்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆராய்ச்சிக்கான படிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்தை சந்திக்க இந்தியா வந்தார்.

அதன்பின் மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 8ம் தேதி இரவு மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரது ஆவணங்களை சரி பார்த்த அதிகாரி இந்தியில் அவரிடம் ஏதோ கேட்க, மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்தில் கேளுங்கள் என சாமுவேல் கூற, அந்த அதிகாரி கோபமடைந்து, இந்தி தெரியாது எனில் தமிழ்நாட்டுக்குப் போ. இங்கு ஏன் வந்தாய்? என அவமானப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் சாமுவேல் புகார், அவர்கள் அந்த அதிகாரியிடம் விசாரித்தனர். அப்போது, அந்த அதிகாரி அதே தொனியிலேயே பேசியுள்ளனர். அதன், வேறொரு கவுண்டரில் அவரின் ஆவணங்களை சரிபார்க்க அந்த உயர் அதிகாரி உதவியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்த லதா

விமானத்திற்கு நேரமாகி விட்டதால் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “எனக்கு தமிழ், ஆங்கிலம் தெரிந்தும் இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையம் 33வது கவுண்டரில் உள்ள அதிகாரி என் ஆவணங்களை சரிபார்க்க மறுத்துவிட்டார். இது பெரிய ஆபத்து” என பல பதிவுகளை இட்டு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, சுஷ்மா சுவராஜ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் டேக் செய்தார். எனவே, இந்த விவகாரம் பூதாகரம் ஆகியது. இவரது டிவிட்டை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிடிவிட் செய்தனர். இதையடுத்து, அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.