பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி இதனை கண்டித்து நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. நேற்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

இதையும் படிங்க பாஸ்-  அதிமுக- பாஜகவுடன் கூட்டணியா? சுதீஷ் பேட்டி

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள் என கூறியிருந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  15 நாடுகளில் மோடி அரசு ரூ.34-க்கு பெட்ரோல் விற்கிறது: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு!

இதனையடுத்து ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்து தனது டுவிட்டரில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி என உலக வங்கி முதல் பன்னாட்டு நிதி ஆய்வறிக்கைகள் வரை சொல்லியும் ப.சி தவறான விவரம் என்கிறார். பொருளாதாரம் இங்கு சீர்குலையவில்லையே என்ற ஏமாற்றமா? பொருளாதார நிபுணர் மன்மோகன் காலத்தைவிடப் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என தெரிவித்தார்.