பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என சொன்னதால் பரபரப்பு ஏற்படுள்ளது.

தமிழக பாஜக தலைவர் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். அதேப் போல எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த இடமாக இருந்தாலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவதிலும் தயக்கம் காட்டாதவர். அதேப்போல இன்று விமான நிலையத்தில் அதிமுக வின் ராஜன் செல்லப்பா கூறியுள்ள கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  பாஜகவை வரவேற்ற ஓபிஎஸ்: வச்சு செய்யும் சொந்த கட்சி!

அதற்குப் பதிலளித்து அவர் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்னால் வந்த அவரது மகன் ‘பாஜக ஒழிக’ எனக் கோஷமிட்டார். இதனையடுத்து தமிழிசையின் ஆதர்வாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  மக்களுக்கு என்ன செஞ்சீங்க? நிர்வாகி கேட்ட கேள்வி - எஸ்கேப் ஆகிய மோடி

ஏற்கனவே தமிழிசைப் பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ டிரைவர் ஒருவரும் விமான நிலையத்தில் மாணவி ஒருவரும் பாஜக வுக்கு எதிராகக் குரல் எழுப்பிய சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஆட்டோ டிரைவரைத் தாக்கியும் மாணவி சோபியா மீது வழக்குத் தொடர்ந்தும் அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக இப்போது என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.