தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி என்றும் தான் ஒரு சமூக சேவகர் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தமிழகமெங்குமிலிருந்து டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம்: நாசர் தகவல்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ஆன கமல்ஹாசன் சுமார் 60 லட்சம் மதிப்பிலான நிவாரணத்தை வழங்கினார்.

மேலும் இன்று தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார் கமல்ஹாசன்.பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பாதிக்கப்பட்ட மக்கள் மிகச்சிறிய 10-க்கு 10 அறையில் 150-க்கும் மேல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இது நல்லதல்ல, ஆரோக்கியமானதல்ல.எனவே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதன்பின் இன்று திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க பாஸ்-  நல்லவர் துணை நின்றால்... ரஜினிக்கு அழைப்பு விடும் கமல்ஹாசன்

பின்னர் அவரிடம், இந்த அரசு மக்களை ஏழ்மையாக ஆக்கி வருகிறது என்ற உங்கள் கருத்துக்கு பதில் அளித்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர் ஆராய்ச்சி செய்து சொல்லட்டும் என்று கூறியிருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் ரசிகர்களை குறி வைக்கும் பாஜக - அஜித் ரியாக்‌ஷன் என்ன?

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு விஞ்ஞானி. நான் ஒரு சமூக சேவகர் என்று கூறி விட்டு சென்றார்.