Home அரசியல் சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை: தந்தை பரபரப்பு புகார்!

சோபியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழிசை: தந்தை பரபரப்பு புகார்!

பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கு முன்னர் கோஷமிட்ட தூத்துக்குடியை சேர்ந்த சோபியாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.

கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய சோபியா விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையை பார்த்துள்ளார். அவரை பார்த்ததும் சோபியா பாசிச பாஜக அரசு ஒழிக ஒழிக என கோஷமிட்டுள்ளார். இதனை கேட்டதும் தமிழிசை உள்ளிட்ட அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின்னர் விமானம் தரையிறங்கியதும் தமிழிசை அந்த கோஷமிட்ட பெண்ணிடம் பாஜகவை விமர்சித்தது குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு அந்த பெண்ணும் தனக்கு பேச்சுரிமை உள்ளது என பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அந்த பெண் மீது விமான நிறுவனத்திடமும், காவல்நிலையத்திலும் தமிழிசை புகார் அளித்தார்.

அதனையடுத்து சோபியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சோபியாவின் தந்தை புதுக்கோட்டை போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் தனது மகளுக்கும் தங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.