மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும், ரசாயன கலவை மூலம் பதப்படுத்தப்பட்ட, 9,600 கிலோ கடத்தல் மீன்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கேரளா மாநிலத்தின் பல பகுதிகளிலும், ரசாயன கலவை கலந்த மீன்கள், சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதைஅடுத்து, முக்கிய இடங்களில், சோதனைச் சாவடி கள் அமைத்து, மீன்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு பகுதியில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே கடத்தி செல்லப்பட்ட, 9,600 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். அவற்றை சோதனை செய்ததில், அந்த மீன்கள் கெடாமல் இருக்க, பிணவறைகளில் பயன்படுத்தப் படும், ஒருவகை ரசாயனங்கள் பூசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை ரசாயனங்களை பயன்படுத்தி, பதப்படுத்தப்பட்ட மீன்களை உண்பதால், மனிதர்களுக்கு உடல் நலக் கேடு ஏற்படும்.அந்த வகையில், 7,000 கிலோ இறால்கள் மற்றும் 2,600 கிலோ பிற வகை மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும், தமிழகத்தின், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.