Tanushree Dutta : நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தாவை அரசியலுக்கும் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மீ டூ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். அந்த மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் ஜாம்ஷெட்பூரில் போட்டியிடுமாறு தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தனுஸ்ரீ சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.