2011 ஆம் ஆண்டு ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நாயகி டாப்ஸி. வெற்றி மாறன் இயக்கிய இந்த படத்திற்கு தேசிய விருது சிறந்த நடிகா் தனுசுக்கும், சிறந்த இயக்குநா் வெற்றிமாறனுக்கும், சிறந்த நடன இயக்குநா் தினேஷ் மாஸ்டருக்கும் கிடைத்தது.

தேசிய விருது பெற்ற படத்தில் நடித்த டாப்ஸிக்கு அதன்பிறகு தமிழில் சொல்லி கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தெலுங்கிலும், பாலிவுட்டில் படங்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார். ஆனால் தமிழில் அவ்வளவாக பெரியதாக தலைகாட்டவில்லை.

ஹிந்தில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் இவா் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிங்க் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடா்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் இளம் நாயகன் ஒருவருக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தில் டாப்ஸி அதில் லிப் லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இந்த முத்தக்காட்சியை டாப்ஸி தனது ட்விட்டா் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.