சமீபத்தில் வெளியான தரமணி படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளரை அழைத்து பாராட்டியுள்ளார்.

கற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் உருவான படம் தரமணி. இப்படத்தில் ஆண்டிரியா, அஞ்சலி மற்றும் புதுமுகம் வசந்த் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த 11ம் தேதி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு நல்ல வசூலையும் குவித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், படத்தின் தயாரிப்பாளரான சதீஷ்குமாரை அழைத்து படத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசி பாராட்டினாராம்.ரஜினிகாந்திடம் இருந்து அழைப்பு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரை போன்ற ஜாம்பாவன்களிடமிருந்து பாராட்டு பெற்றிருப்பது, எனது நிறுவனம் சிறந்த படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.