Tasmac holdiay – தேர்தல் காரணமாக 3 நாட்கள் டாஸ்மாக் தொடர் விடுமுறை விட்டுள்ள நிலையில் சரக்கை வாங்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் இன்று முதல் 18ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 நாட்களுக்கும் சேர்த்து குடிமகன்களில் பலரும் மொத்தமாக நேற்று முண்டியடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இந்த 3 நாட்களுக்கு மதுபாட்டில்களை பிளாக்கில் விற்க முடியாத அளவுக்கு அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். அதேபோல், சரக்கை வாங்கி பதுக்கி வைத்திருந்தால் பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, குடிமகன்கள் உஷார்….!