விஜய் தேவரகொண்டாவின் டாக்ஸிவாலா  திரைபடம் ரிலீஸ்க்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது. 

 

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் வெளியான அன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைப்பார்கள்.சமிபத்தில் சவால் விட்டவாறு சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டனர் தமிழ்ராக்கர்ஸ்.

நோட்டா,கீதா கோவிந்தம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் படம் ‘டாக்ஸிவாலா’.

இப்படம் வரும் நவம்பர் 17ம் தேதிதான் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த படம் வெளியாகும்  முன்னரே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனால்,என்ன செய்வது என்று தெரியாமல் படகுழுவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.