அமெரிக்காவில் இரு பள்ளி மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மலைப்பகுதில் அமைந்துள்ள மிச்சிகன் பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் கேத்ரின் மேரி(26). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 16 மற்றும் 17 வயதுள்ள இரு மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக விசாரணை நடத்தப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை இவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக அப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆசிரியை கேத்ரினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அமெரிக்காவில், பள்ளி மாணவர்களுடன் ஆசிரியை தகாத உறவில் ஈடுபட்டு, அது நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வருவது பல வருடங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.