இதுல கூடவா காப்பி- அட்லியை வறுத்தெடுத்த நெட்டீசன்கள்

atlee shankar

காப்பி பேஸ்ட் என்றால் அது நம்ம இயக்குனர் அட்லீ என்று தான் அனைவரும் சொல்லுவோம். அந்தளவுக்கு அவரது படங்கள் காப்பி படங்களாக உள்ளது. அவர் இயக்கிய மூன்று படங்களும் முந்தைய படங்களின் காப்பி தான் என்று அனைவரும் சொல்லும் படியாக உள்ளது. ஆனாலும் காப்பி செய்து படம் இயக்கினாலும் அந்த படங்கள் ஹிட்டை தான் அவருக்கு கொடுத்தது. அவர் முதன் முதலில் இயக்கிய ராஜா ராணி படமும் மௌனராகம் படத்தின் தழுவல் என்று தான் நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

அடுத்து அவர் விஜயை வைத்து இயக்கிய தெறி படம் சத்ரியன் படத்தை போல இருந்தது. அடுத்து மெர்சல் இந்த படமும் ஒரு படத்தின் காப்பி தான் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து புதிய படம் இயக்கவிருக்கிறார். நெட்டிசன்கள் அட்லீ விஜய் வைத்து இயக்க உள்ள விஜய் 63 படம் எந்த படத்தின் தழுவலாக இருக்கும் என்பதை கண்டறிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைவரும் வாழ்த்தும் அதை பற்றிய போஸ்டும் பதிவிட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்களாகட்டும், மாணவர்களாகட்டும் தங்களது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது சினிமா குருவான இயக்குனர் ஷங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது கருத்தை வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவரது போஸ்ட்டுக்கு அனைவருக்கும் லைக்ஸ் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த ட்விட்டும் அவருடையது அல்ல. அதையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இயக்குனர் அட்லி போட்டுள்ள டுவிட்டும் காப்பி செய்ய பட்டுள்ளதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து உள்ளனர். சொந்தமாக ஒரு போஸ்ட் கூட போட மாட்டிர்களா? என்று அட்லியை கேலி செய்து வருகின்றனர்.