தெலங்கானா மாநிலத்தில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகமடைந்த கணவன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரவீன்குமார் மற்றும் சாந்தினி. சாந்தினிக்கு பிரவீன் குமார் இரண்டாவது கணவர் ஆவர். முதல் திருமணத்தின் மூலம் சாந்தினிக்கு அயான் என்ற மகன் உள்ளார். பிரவீன் குமாருக்கும் சாந்தினிக்கும் கிறிஸ்டி என்ற மகனும் உள்ளார்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சாந்தினி நடத்தை மேல் பிரவீன்குமாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் விரிசல் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ தினத்தன்றும் அதுபோல சச்சரவுகள் எழ, தனது வீட்டில் இருந்த பெற்றோர் மற்றும் சகோதரர்களை வெளியே அனுப்பிவிட்டு சாந்தினியை இரும்பு ராடால் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதையடுத்துத் தனது இரண்டு மகன்களையும் அதே இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். இதுசம்மந்தமாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.