எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான ‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு இதுவரையில் இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.1000 கோடி வசூலை இந்த படம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முதல் நாளே பார்க்க ஆன்லைனில் பலர் முண்டியடித்து ரிசர்வ் செய்து வருகின்றனர். இந்தியாவின் பல திரையரங்குகளில் இந்த படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுக்களின் முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த போலிஸ்காரர் ஒருவர், பாகுபலி 2 படம் பார்ப்பதற்காக தனக்கு விடுமுறை அளிக்கும்படி உயரதிகாரிக்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தன்னுடைய விடுமுறை கடிதத்தில், ” கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும், எனவே தனக்கு வரும் 28-ஆம் தேதி விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதியில் ஐடி ஊழியர் ஒருவர் விடுமுறை விண்ணப்பம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.