செல்பி எடுக்க வந்த ரசிகரை அடித்து தள்ளிய சூப்பர் ஹீரோ- வீடியோ

தனக்கு முன் நின்று செல்பி எடுக்க முயன்ற ரசிகரை  நடிகர் பாலகிருஷ்ணா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா. தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். அவருடைய படங்களின் சண்டை காட்சிகள் நம்மை கிச்சுகிச்சு மூட்டினாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. பொதுவாகவே பாலகிருஷ்ணா மிகவும் கோபக்காரராகவே இருப்பார் போல. பொது இடங்களில் ரசிகர்களை தாக்குவது போன்ற சர்ச்சைகளில் அதிகம் சிக்குபவரும் இவரே. சமீபத்தில் இவருடை ஷூவை கழற்ற கூறி அவரது உதவியாளரை தலையில் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர், பாலகிருஷ்ணா நந்தியால் தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். அந்த வேலை அவருக்கு அருகில் நின்று ஒரு இளைஞர் செல்பி எடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த பாலகிருஷ்ணா அந்த ரசிகர்ரை பளார் என்று அடிது தள்ளினார். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்,

இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் இவருக்கு புதிதல்ல என்றாலும் தொடந்து அந்த குணத்தை மாற்றாமல் இருக்கிறாரே என்று பலர் முணுமுணுத்தனர்.