பொதுவாக நடிகைகள் பாலியல் தொந்தரவுக்குள்ளாவது தொடர் கதையாகவே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. அந்த சம்பவம் மறைவதற்குள் இதே போன்று ஒரு சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஒருவர் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
 
அவர் தனது புகாரில், படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நான் ரயிலில் வருகிறேன் என கூறினேன். ஆனால் நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி ஆகியோர் காரில் வருமாறு கூறினர். காரில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்கள். இதனை யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கையே காலி, பட வாய்ப்பே வராமல் செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையம் வந்தேன் என அந்த புகாரில் நடிகை கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக இயக்குனரிடம் போலீஸார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.