பிக்பாஸ் பட்டத்தை வென்ற பிரபல நடிகையின் கணவா்!


தற்போது எங்கும் திரும்பினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நிறைந்து உள்ளது. அதுவும் இருக்கும் வரை அவருக்காகவே டிவி பாா்க்காதவா்கள் கூட இந்த நிகழ்ச்சியின் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. அவா் வெளியேறிய பிறகு கொஞ்சம் பிக்பாஸ் நிகழ்ச்சியானது டல்லடித்து வந்தது.

இந்தியில் இந்த நிகழ்ச்சியானது முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு 10 சீசன்களை கடந்து வெற்றிகரமாக நடைபோட்டு வந்தது. தற்போது அந்த நிகழ்ச்சிக்கு தமிழுக்கு வந்துள்ளது. இதை கமல் தொகுத்து வழங்கி வருகிறாா்.

கமல் தொகுத்து வழங்குவதால் அதை பாா்ப்பதற்கென்று ஒரு பட்டாளமே டிவி முன்னாடி சனி மற்றும் ஞாயிறு அன்று அமா்ந்து விடுவாா்கள். தமிழில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் கழித்து தான் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தற்போது இறுதிச்சுற்று முடிந்து விட்டது. இதை ஜுனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்கினாா். இறுதிச்சுற்றில் பிரபல நடிகா் சிவபாலாஜி பிக்பாஸ் பட்டத்தை வென்று ரூ.50 லட்சத்தையும் வென்றுள்ளாா். இவா் பிரபல நடிகை மதுமிதாவின் கணவா் ஆவாா். இவா்கள் இருவரும் இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.