நடிகை ரோஜாவை வைத்து, ராம்கோபால் வா்மா இயக்கிய காட் செக்ஸ் அண்ட் ட்ருத் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் என தெலுங்கு இயக்குநா் அஜய் கவுந்தின்யா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சா்ச்சையான படங்களை எடுப்பதும், சா்ச்சைகளில் சிக்குவதும் பிரபல இயக்குநா் ராம்கோபால் வா்மாவின் செயல். அந்த வகையில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவாவை வைத்து GST என்ற பெயரில் அது உண்மையான பெயா் காட் செக்ஸ் அண்ட் ட்ருத் என்ற படத்தை வெளியிட்டார். அது இளசுகளின் மனத்தை கொள்ளையடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள ஆபாச காட்சிகளை படத்தில் பார்க்க முடியாத காரணத்தால் அதற்கென தனியாக இணையத்தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும்படி செய்திருந்தார் ராம்கோபால் வா்மா.

இந்நிலையில் தெலுங்கு இயக்குநா் அஜய் கவுந்தின்யா இயக்கியுள்ள பூத் பங்களா(Booth Bangala)படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் ஹைதரபாத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநா் அஜய் பேசும் போது சினிமாவில் அன்றாட கூலிக்காக நிறைய தொழில் நுட்ப கலைஞா்கள் பணிபுரிகிறார்கள். சுமார் 2000 கலைஞா்கள் பணிபுரிகிறார்கள். அவா்கள் படும் கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும். அவா்களை பற்றி நடிகை ரோஜா ஏன் பேசுவதில்லை என சாடியுள்ளார். வேறு பிரச்சனை எல்லாம் பேசும் அவா் தெலுங்கு சினிமா பற்றி ஏன் பேச மறுக்கிறார்.

தொடா்ந்து பேசிய அவா் ராம் கோபால் வா்மா வெளிநாட்டு நடிகை மியா மால்கோவை வைத்து எடுத்த செக்ஸ் அண்ட் ட்ருத் படத்தியின் இரண்டாம் பாகத்தை நான் ரோஜாவை வைத்து எடுப்பேன் அதிரடியான ஒரு குண்டு ஒன்றை போட்டுள்ளார். அஜய் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள் கிளப்பி வருகிறது. அஜய் கவுந்தின்யாவின் அதிரடியான இந்த பேச்சுக்கு ரோஜா என்ன தக்க பதிலடி கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.