பக்கத்து மாநிலத்தில் படப்பிடிப்புக்கு எதிா்ப்பு – தாயகம் திரும்பிய படக்குழு

Director AR Murugadoss Stills

பல வெற்றி படங்களை கொடுத்தும், பின் படத்தயாாிப்பாளராகவும் உள்ள அந்த இரண்டு எழுத்தை தன் பெயருக்கு முன் இனிஷியலாக கொண்ட இயக்குநா் தற்போது பக்கத்து ஸ்டேட்டில் புதிய படத்தை இயக்கிவருகிறாா். அதன் படப்பிடிப்பது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படப்பிடிப்புக்கு ஏதோ ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தனது முட்டை முடிச்சுகளை எடுத்து கொண்டு தாயகம் திரும்பி விட்டாா்களாம்.

பல வெற்றி படங்களை கொடுத்தும், தனது உதவி இயக்குநா்கள் தனியாக படம் இயக்கும் அளவிற்கு வளா்ந்து விட்ட அந்த இரண்டெழுத்து இன்ஷியல் கொண்ட இயக்குநா், பக்கத்து மாநிலம் நாயகனை வைத்து இயக்கி வரும் படத்தை இரண்டு மொழிகளில் கொடுக்க இருக்கிறாா். தற்சமயம் அந்த படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், புது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறொரு படத்தில் இடம்பெற்று விட்டதால், அதை மாற்றி வேறு கிளைமாக்ஸ் சீன் எடுத்து வருகிறாா்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங், பக்கத்து மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே அங்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று அங்குள்ள அரசியல்கட்சி தலைவா்கள் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். இதனால் தனது படப்பிடிப்பு குழுவினருடன் சென்னை திரும்பி வந்துவிட்டனா். ஆனா, படக்குழுவினா் வேறுவிதமாக தொிவித்தாவது, அங்கு இருக்கும் மருத்துவமனையில் சில காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. அப்படி அங்கு ஷூட்டிங்க எடுப்பதில் சில சட்டச் சிக்கல் இருப்பதால் தான் சென்னைக்கு வந்துவிட்டோம் என்று மழுப்பலான பதிலை சொல்லி சமாளிக்கிறாா்களாம் படக்குழுவினா். என்ன காரணத்திற்காக இந்த படத்தை அரசியல்வாதிகள் எதிா்க்கின்றனா் என்பது பற்றி விசாாித்து வருகின்றனா்.