டைரக்டர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த திரைப்படம் போகன். தனி ஒருவன் திரைப்படத்தின்  வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இப்படத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் கலந்த திரைப்படமான இது மீண்டும் வெற்றி பெற்றது. ஹன்சிகா மோத்வானி இப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது போகன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கிலும் லக்ஷ்மன் அவர்களே இத்திரைப்படத்தை  இயக்க உள்ளார். ரவி  தேஜா கதாநாயகனாகவும்,  கேத்தரின் தெரசா கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். அரவிந்த் சாமி சில காரணங்களால் தெலுங்கு போகனில் நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக யாருக்கு அந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் எனும் தேடும் படலத்தில் இறங்கி உள்ளனர் படக்குழுவினர். இம்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

தெலுங்கில் இயக்கப்படும் போகன் திரைப்படத்தின் சில மாற்றங்கள் இருப்பதாகவும் , முக்கியமாக படத்தின் இரண்டாம் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளை இணைக்கப் போவதாகவும், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து, மூன்றே மாதங்களில் முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தனி ஒருவன் திரைப்படம் துருவா எனும் பெயரில் தெலுங்கில் இயக்கப்பட்டு அபார வெற்றி பெற்றது, அதே போல் போகணும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.