காதலன் ஏமாற்றியதால் பிரபல சீரியல் நடிகை ஜான்சி திடீரென தற்கொலை செய்து கொண்டார்

தெலுங்கில் பிரபல சீரியலான பவித்ர பந்தம் சீரியலில் நடித்து வந்தவர் ஜான்சி, இவர் சூர்யா என்பவரை காதலித்து வந்தார். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஜான்சியை சூர்யா திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜான்சி, ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள தன்னுடைய தன்னடைய அப்பார்ட்மெண்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை

அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில விஷயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.