சென்னையில் கோயிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அர்ச்சகர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை முத்தியால்பேட்டையை சேர்ந்த 15 வயதான சிறுமி அருகில் உள்ள பள்ளியொன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தெய்வபக்தி கொண்ட இந்த சிறுமி அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அங்குள்ள அர்ச்சகர் நடராஜ் சிறுமியிடம் அன்பாக பழகி வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தவறான விஷயங்களுக்கு அழைத்த தமிழ் திரையுலகம் முன்னாள் நடிகை ஆம்னி பகீர்

இந்நிலையில் சமீபத்தில் கோயிலுக்கு வந்த சிறுமியிடம் அர்ச்சகர் நடராஜ் அன்பாக பேசி அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அர்ச்சகர் நடராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  தாயுடன் உல்லாசம் ; மகளுடன் பாலியல் சீண்டல் : சென்னை ஜிம் கோச் கைது

இந்த புகாரின் பேரில் அர்ச்சகரை போஸ்கோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் அர்ச்சகரிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.