ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நாளை முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு கெடுவும் விதித்தது. இல்லாவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  இயக்குநர் கவுதமன் கைது: குறிவைத்து தூக்கும் காவல்துறை!

தற்காலி ஆசிரியர்களை நியமிக்கும் பணியிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும், தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  சன் டிவி அலுவலகம் முன் சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

காலக்கெடுவிற்கு பின் பணிக்கு வரும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் பணியாற்றுவதற்கு உத்திரவாதம் தரமுடியாது எனவும் அரசு கூறியது. எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்.

இதற்கிடையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நாளை தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.