பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார்.

சுஜா பிக்பாஸ் வீட்டில் வரும்பொழுது காயத்ரி அவரை 10 ஜூலிக்கு சமம் இவர் என்று கூறினார். அதனை கேட்ட சினேகன், ஒரு ஜூலியை சமாளிக்கவே பெரிய கஷ்டமாகிவிட்டது. இவர் வேறு தலைவலியா என்று கமெண்ட் செய்தார். காயத்ரியின் கூற்று கிட்டத்தட்ட உண்மை என்றே தோன்றுகிறது.

நேற்று வையாபுரியிடமும்,பிந்து மாதவியிடமும் கேள்விகளால் வறுத்தெடுத்தார். எப்படி நீங்கள் என்னை கிண்டல் செய்து பாடலாம் என்று வையாபுரியிடம் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தார். அதேபோன்றுதான் பிந்து மாதவிடமும். ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே சுஜாவின் பேச்சு எரிச்சலை வரவழைத்தது என்பதே உண்மை. இன்னும் என்ன கூத்துகளெல்லாம் அறங்கேறுமோ பிக்பாஸ் நிகழ்ச்சியில். கமல்ஹாசன் சொல்வது போல் என்ஜாய் பன்னுவதுதான் நமது வேலை