சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து இன்று பிரபல இயக்குனராக இருப்பவர்

எஸ்.ஆர் பிரபாகரன் அவர்கள்

சுந்தரபாண்டியன், கதிர்வேலன் காதல் போன்ற படங்களின் இயக்குனர் இவர்.

இன்று வெளியிட்டுள்ள முகநூல் செய்தியில் இவ்வாறு இவர் குறிப்பிட்டுள்ளார்

சுப்ரமணியபுரம் திரைப்படம் திரைக்கு வந்து 10ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறது. கண்கள் முன்பு சுப்ரமணியபுரம் படக்குழுவினர் அனைவரும் எப்படி இணைந்து உழைத்தோம் என்பது நினைவுக்கு வருகிறது ,

இந்த அழகிய நினைவை தந்ததற்காகவும் எனக்கு சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இணைஇயக்குனராக பணிபுரிய வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல்

என்னை இயக்குனராகவும் உருவாக்கியதற்கு என் குரு சசிகுமார் அண்ணனுக்கு என்றென்றும் நன்றிகள் பல….